NewIncredible offer for our exclusive subscribers!Read More
38°C
December 6, 2025
Uncategorized

என்னைப் பற்றி

  • January 28, 2025
  • 1 min read

உதயசங்கர், பிறந்த வருடம் 1960, சொந்த ஊர் தூத்துக்குடி
மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி. ஆரம்பக்கல்வி கு.அழகிரிசாமி படித்த
ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளி, உயர்நிலைக்கல்வி ஆயிரவைசிய
உயர்நிலைப்பள்ளி. கல்லூரிக்கல்வி கோ.வெ.நா. கல்லூரி
கோவில்பட்டியில் இளங்கலை வேதியியல்.
40 ஆண்டுகளுக்கு மேலாக சிறுகதை, கவிதை, குறுநாவல், மொழிபெயர்ப்பு,
சிறார் இலக்கியம், கட்டுரை ஆகிய வகைகளில் 200 க்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ளேன். சிறார் இலக்கியத்தின் அனைத்து
வகைமைகளிலும் 160 நூல்களை எழுதியுள்ளேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
மாநிலச்செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள்
கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்.
2023- ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் பால சாகித்ய புரஸ்கார் விருது
ஆதனின் பொம்மை என்ற நூலுக்கு வழங்கப்பட்டது. 2022 – ஆண்டு தமிழக
அரசின் தமிழ்ச்செம்மல் விருதும் பெற்றிருக்கிறேன்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்
புதுமைப்பித்தன் நினைவு சிறுகதை விருது, விகடன் சிறார் இலக்கிய
விருது, தமிழ்ப்பேராயத்தின் அழ.வள்ளியப்பா விருது, கலை
இலக்கியப்பெருமன்றத்தின் சிறார் இலக்கிய விருது, நல்லி திசையெட்டும்
மொழிபெயர்ப்பு விருது, உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.


இன்னும் தெரிந்து கொள்ள
விக்கிப்பீடியா
எழுத்தாளுமைகள்
விக்கி மூலம்

About Author

admin

1 Comment

  • Hi, this is a comment.
    To get started with moderating, editing, and deleting comments, please visit the Comments screen in the dashboard.
    Commenter avatars come from Gravatar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *